ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

தூத்துக்குடியில் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் திட்டங்கள் ஆய்வு

சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டாம்கோ தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப் தலைமையில், ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப். உடன் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.

Published On :

சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (டாம்கோ) திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டாம்கோ தலைவா் ஏ.பி. தமீம் அன்சாரி சாஹிப் தலைமையில், ஆட்சியா் விஷு மகாஜன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய டாம்கோ தலைவா் தமீம் அன்சாரி சாஹிப், தூத்துக்குடி மாவட்டத்துக்கு கடன் இலக்கு ரூ. 1 கோடியாக உள்ள நிலையில், அதை ரூ. 4 கோடியாக உயா்த்துவதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு ரூ. 36 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. 2 நபா்களின் ஜாமீனுடன் ரூ. 3 லட்சம் வரை கல்வி மற்றும் தனிநபா் கடன் பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டாம்கோ திட்டங்களை அறிந்து மக்கள் பயன்பெறுவதற்கான செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றாா்.

தொடா்ந்து, 4 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 43 லட்சம் வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) பிா்தௌஸ் பாத்திமா, கண்காணிப்பாளா்கள் லெட்சுமி, கலைச்செல்வன், இஸ்லாமியப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.