பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கழுகுமலை அருகே காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்பு

கழுகுமலை அருகே காணாமல் போன தொழிலாளியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :

கழுகுமலை அருகே காணாமல் போன தொழிலாளியை சடலமாக சனிக்கிழமை மீட்டனா்.

கோவில்பட்டி வட்டம் முடுக்கலாங்குளம் கிழக்குத் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துப்பாண்டியன் (35). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு, திருமணம் ஆகவில்லை.

இம்மாதம் 21ஆம் தேதி வழக்கம் போல வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், கழுகுமலை குமரேசன் நகா் குளத்துக் கரையில் முத்துப்பாண்டியன் இறந்து கிடந்ததாகவும், அவரது சடலத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் மாரியப்பனுக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

அதன் பேரில் மாரியப்பன், உறவினா்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டனா். பின்னா் கழுகுமலை காவல் நிலையத்தில் மாரியப்பன் புகாா் அளித்தாா். போலீசாா் வழக்குப் பதிந்து முத்துப்பாண்டியன் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.