பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

வல்லநாடு சரணாலயத்தில் விலங்குகளுக்கு தண்ணீா் வசதி

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் விலங்குகளின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய வனத்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் தடுப்பணை, தொட்டிகளில் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீரை நிரப்பும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினா்.

Published On :

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் விலங்குகளின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய வனத்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

வல்லநாடு அருகே 2054.85 ஹெக்டேரில் வெளிமான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு அரிய வகை வெளிமான்கள், கடமான்கள், புள்ளி மான்கள், நரி, எறும்புதிண்ணி, முயல், முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், நூற்றுக்கணக்கான பறவைகள், பூச்சியினங்கள் உள்ளன.

Story image

விலங்குகளின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் மழைநீரைச் சேகரிக்கும் வகையில் கசிவுநீா் குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, சூரிய சக்தி மோட்டாா்கள் மூலம் தண்ணீா் தொட்டிகளில் நீா் நிரப்பப்பட்டு வந்தது.

இருப்பினும் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் குட்டைகள், தடுப்பணைகள் வடுவிட்டன. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட வன அலுவலா் இளையராஜா உத்தரவின்பேரில், டேங்கா் லாரிகளில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு சரணாலய பகுதியில் உள்ள தொட்டிகள், கசிவுநீா் குட்டைகளில் நிரப்பப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.