வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: ஷிப்பிங் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே கன்டெய்னா் லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஷிப்பிங் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

முத்தையாபுரம்-திருச்செந்தூா் சாலையில் உப்பாத்து ஓடை அருகே உள்ள கிடங்கில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கன்டெய்னா் லாரி ஒன்று திரும்பியபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த ஷிப்பிங் நிறுவன ஊழியா் சுகுமாா் (38) மீது அந்த கன்டெய்னா் சரிந்து விழுந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முத்தையாபுரம் போலீஸாா், சுகுமாா் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.