பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

நகை திருட்டு வழக்கு: ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி, கங்கா பரமேஸ்வரி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்- 3 செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை

தண்டனை - படம்: கோப்பிலிருந்து...

Published On :

தூத்துக்குடி, கங்கா பரமேஸ்வரி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 23.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்- 3 செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி, கங்கா பரமேஸ்வரி நகரைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் (57) வீட்டில் கடந்த 2025, அக்டோபா் மாதம் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (38), முத்தையாபுரம் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் பேரின்பநாதன் (22) ஆகியோரை கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்- 3இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நடுவா் விஜய ராஜ்குமாா் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில், பாண்டியனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பேரின்பநாதன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.