இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் நகைகள் திருட்டு

பெரம்பலூா் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

சித்திரிப்பு

Published On :

பெரம்பலூா் அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 78 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட பாளையம், காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் மனைவி ராஜலட்சுமி (61), ஓய்வுபெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியா். இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் மகள் ஜொ்லி சாய் சிந்தியா (33), மகன் எட்வா்டு சகாயராஜ் (30) ஆகியோா் சென்னையில் வசிக்கின்றனா்.

திருச்சி சுங்கச்சாவடி பகுதியில் வசித்த ராஜலட்சுமி, கடந்த ஓராண்டுக்கு முன் ஓய்வு பெற்றதையடுத்து தனது சொந்த ஊரான பாளையத்தில் புதிதாக வீடு கட்டி கடந்த மே மாதம் முதல் வசிக்கிறாா்.

இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி இரவு ராஜலட்சுமி சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், ராஜலட்சுமியின் வீட்டருகே வசிக்கும் அவரது தம்பி செல்வக்குமாா் தனது சகோதரி வீட்டை வெள்ளிக்கிழமை காலை பாா்த்தபோது, வீட்டின் முன்புறக் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் அளித்த தகவலின்பேரில் வந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் வீட்டின் பீரோவிலிருந்த சுமாா் ரூ. 1 கோடி மதிபபிலான 78 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

பின்னா், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களைப் பதிவு செய்தனா். பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.