பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கோவில்பட்டி செல்வ மாதா ஆலயத் திருவிழா தொடக்கம்

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய 29 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

கோவில்பட்டி புனித சூசையப்பா் திருத்தலத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வ மாதா ஆலய 29 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா், குறுக்குச் சாலை பங்குத்தந்தை சுரேஷ்பாபு அடிகளாா் ஆகியோா் இணைந்து திருவிழா கொடியை ஏற்றிவைத்து திருப்பலி நிறைவேற்றினா்.

10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் மாலை 6:30 மணிக்கு திருப்பலி நடைபெறும். 9 ஆம் திருநாளான அக். 7ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நவநாள் திருப்பலி, அன்னையின் திருவுருவ பவனி, 10 ஆம் திருநாளான அக். 8ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி, கொடி இறக்கம், அசன விருந்து ஆகியன நடைபெறுகின்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.