திருவாரூர், ஆக. 5: திருவாரூர் நகரில் செயல்பட்டு வரும் நகரக் காவல் நிலையத்தை ஊரகப் பகுதிக்கு மாற்ற காவல் துறை மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே நகரின் மையப் பகுதியான அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் கீழ வீதியில் வாடகைக் கட்டடத்தில் நகரக் காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இதனால், நகரில் எந்தப் பகுதியில் குற்றங்கள் நிகழ்ந்தாலும், அங்கு விரைந்து செல்வதற்கும், வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், தகவல் கிடைத்தவுடன் எளிதாகப் புறப்பட்டுச் செல்வதற்கும் ஏதுவாக நகரின் மையப் பகுதியில் இந்த இடம் உள்ளது.
இந்நிலையில், திருவாரூர்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்டலை கிராமத்தில் ஏறத்தாழ 234 ஏக்கர் பரப்பளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளது. இதில் ஏறத்தாழ ரூ.20 லட்சம் செலவில் காவல் நிலையக் கட்டடம் கட்டப்பட்டு, ஓராண்டுக்கு மேலாக திறக்கப்படாமல், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்துக்குதான் நகரக் காவல் நிலையத்தை மாற்ற தற்போது காவல் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு ஆக. 9-ம் தேதி (அமாவாசை தினத்தன்று) நாளும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்திட்ட வளாகத்தில்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிற அரசுத் துறை அலுவலகங்கள், தாற்காலிகமாகச் செயல்பட்டு வரும் மத்தியப் பல்கலைக்கழகம், தற்போது புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைந்துள்ளன.
திருவாரூர் நகரின் மையப் பகுதியில் இயங்கி வரும் நகரக் காவல் நிலையத்தை நகரிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவில் உள்ள ஊராட்சிப் பகுதியான தண்டலைக்கு மாற்றுவதால், நகரில் குற்றத் தடுப்பு, ரோந்துப் பணி, வாகனச் சோதனை, குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளைத் தப்பவிடாமல் பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படும் என்கின்றனர் போலீஸôர்.
"ஊருக்குள் காவல் நிலையம் இருக்கிறது என்ற பயமே குற்றம் செய்பவர்களையும் யோசிக்க வைக்கும் நிலை மாறி, போலீஸôர் வருவதற்குள் நாம் 30 கிலோ மீட்டர் தொலைவுகூடத் தப்பிச் சென்றுவிடலாம் எனந்க் குற்றவாளிகளுக்கே தைரியத்தை அளிóக்கும் வகையிலான தவறான முடிவுதான், இந்தக் காவல் நிலைய மாற்றம் திட்டம் என்கிறார்' நகர மேம்பாட்டுக் குழுச் செயலர் வி.கே.எஸ். அருள்.
"நகரத்துக்கான காவல் நிலையம் நகரின் மையப் பகுதியில் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வருவதற்கும், போலீஸôர் எளிதில் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருவதற்கும் தற்போதுள்ள இடமே மிகவும் வசதியானது. நகரிலிருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பது நகரில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும், சிறப்பு பாதுகாப்புப் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் போலீஸôருக்கே பெரும் சிரமமாக இருக்கும்.
எனவே, நகரக் காவல் நிலையத்தை ஊரகப் பகுதிக்கு மாற்றுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும்' என்றார் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் பிறை. அறிவழகன்.
திருவாரூர் நகரையொட்டி சுற்றுவட்டாரத்தில் ஏறத்தாழ 10 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கிராமங்களுக்கான காவல் நிலையமாக திருவாரூர் ஊரக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையம் திருவாரூர் நகரிலேயே நேதாஜி சாலை அருகேயுள்ள அண்ணா சிலைக்கு எதிர்புறம் வாடகைக் கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது.
நகரக் காவல் நிலையம் மாற்றப்படவுள்ள புதிய காவல் நிலையக் கட்டடம் அமைந்துள்ள பகுதி ஊரக காவல் நிலைய சரகத்துக்குள்பட்டதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஊரக காவல் நிலையத்தை வேண்டுமானால் இந்தப் புதிய கட்டடத்துக்கு மாற்றலாம் என்பதும் காவல் துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்களின் கருத்தாக உள்ளது.
எனினும், காவல் துறையின் மத்திய மண்டல தலைவர் அலுவலகம் நகர காவல் நிலையத்தை மாற்ற உத்தரவிட்டுவிட்டதால், என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நிற்கின்றனர் மாவட்டக் காவல் துறை அலுவலர்கள்.
மாவட்டத் தலைமையகமாகவும், வளர்ச்சியடைந்து வரும் நகராகவும் உள்ள திருவாரூரில் நகர காவல் நிலையத்தை நகரைவிட்டு, தொலைவிடத்துக்கு மாற்றாமல், நகரின் மையப் பகுதியிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதுதான் நகரவாசிகளின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற் பயிற்சி நிலைய மாணவா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு

நடிகா் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பாா்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: கோவை மாவட்ட 10 தொகுதிகளில் 183 போ் போட்டி

தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என முதல்வா் கூறுவது பொய்: கே.அண்ணாமலை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

