தஞ்சாவூர், ஆக. 25: தஞ்சை கரந்தைப் பகுதியிலுள்ள பழங்கால குளம் சீரமைக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், படகு சவாரிவிட வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சை நகரில் சாமந்தான்குளம், அழகிக் குளம், சிவகங்கை குளம், மாரியம்மன் கோயில் சமுத்திரம் ஏரி உள்ளிட்ட ஏராளமான ஏரிகள், குளங்கள் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு, பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அவற்றில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட குளங்களைத் தவிர, எஞ்சி இருக்கும் குளங்களையாவது பாதுகாக்க வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் 1,000-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை நகர வளர்ச்சிப் பணிகளுக்கு தமிழக அரசு | 25 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியிலிருந்து சாமந்தான்குளம், பாதி ஆக்கிரமிப்பில் உள்ள மாரியம்மன்கோயில் சமுத்திரம் ஏரி உள்ளிட்டவை சீரமைக்கப்படவுள்ளன.
நகரில் பல குளங்கள் தூர்க்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணம் சாலை கரந்தை வடவாறு அருகில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய பழங்கால குளம் ஒன்று உள்ளது. தற்போது குளம் இருக்கும் இடம் தெரியாத வகையில், குளத்தைச் சுற்றிலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பார்த்தால் குளம் இருப்பதே தெரியாது.
இந்தக் குளத்தில் எப்போதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். கோடைகாலத்தில்கூட சுமார் 10 அடி ஆழம் வரை நீர் இருந்து கொண்டே இருக்கும் இந்தக் குளத்தைச் சீரமைத்து பாதுகாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இதே போக்கு சில ஆண்டுகள் தொடர்ந்தால், குளம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படும். தற்போது பெரிய கோயில் விழாவையொட்டி, தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு, இந்தக் குளத்தை சீரமைத்து அதில் வடவாற்றிலிருந்து குழாய் மூலம் நீரைக் கொண்டு வந்து குளத்தைப் பாதுகாக்கலாம். 5 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளதால், அதில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் படகு சவாரி விட்டு நகராட்சி வருமானத்தைப் பெருக்கலாம்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீச்சல் பயிற்சி பெறும் வகையிலும் இந்தக் குளத்தைச் சீரமைக்கலாம். ஆனால், இதைச் செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

