மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கறம்பக்குடிக்கு காவிரிக் குடிநீர் கிடைக்குமா?

ஆலங்குடி, செப். 16:  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி பகுதிக்கும் காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.    கறம்பக்குடி வட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:45 pm

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, செப். 16:  புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி பகுதிக்கும் காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   கறம்பக்குடி வட்டமானது 39 ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. ஏறத்தாழ 88 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தவிர, வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத் துறை அலுவலகம், வங்கிகள், வேளாண் துறை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம், வட்டார வள மையம், தொடக்கக் கல்வி அலுவலகம், காவல் நிலையம் என்று இங்குள்ள பல்வேறு அலுவலகங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிற ஊர்களிலிருந்து வந்து செல்கின்றனர்.

  கறம்பக்குடியின் ஒரு நாள் குடிநீர்த் தேவை ஏறத்தாழ 2.5 லட்சம் லிட்டர் எனக் கருதப்படுகிறது. ஆனால், வானம் பார்த்த பூமியான கறம்பக்குடியில் இவ்வளவு நீராதாரத்துக்கு வழியில்லை.

  நிலத்தடி நீராதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு, மின்வெட்டு பிரச்னையும் சேர்ந்துகொள்வதால், மக்கள் அடிப்படைத் தேவையான குடிநீருக்காக அன்றாடம் அல்லல்படுவதும் அவ்வப்போது போராட்டத்தில் இறங்குவதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது.

  இத்தகைய சூழலில்தான் காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் கீழ் கறம்பக்குடிக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

  இதற்காக அரசு புதிதாக பெரிய அளவில் எந்தக் கட்டமைப்பையும் ஏற்படுத்தத் தேவையில்லை. காரணம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 706 கிராமங்கள் பயனடையும் வகையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

  இதற்கான குடிநீர்க் குழாய் கறம்பக்குடி வட்டத்திலுள்ள மாங்கோட்டை வழியாகத்தான் அந்தப் பகுதிகளுக்குச் செல்கிறது. ஆகையால்,கறம்பக்குடிக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தினாலே மக்களின் குடிநீர்த் தேவை நிறைவடைந்துவிடும் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

  இதுகுறித்து கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பெர்னத்மேரி சூசைராஜ் கூறியது:

  ""கறம்பக்குடி பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லலுறுவதை அன்றாடம் பார்க்கிறோம். உள்ளாட்சி நிர்வாகங்களால் முடிந்த அளவுக்கு மக்களின் தேவையை நிறைவு செய்ய முனைகிறோம். ஆனால், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காவிரிக் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை கறம்பக்குடிக்கும் நீடிப்பு செய்வதுதான்'' என்றார் அவர்.

  பொதுமக்களின் கருத்தும் இதுவே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.