அரியலூர், செப். 26: அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத பயணச் சீட்டு பெறும் மையத்தில் 2 பணியிடங்களில் ஒருவர்தான் பணியாற்றி வருகிறார். மற்றொரு இடத்துக்கு கடந்த ஓராண்டாகப் பணியாளர் நியமிக்கப்படாததால், ரயில் பயணிகள் ரயில் பயணச் சீட்டு பெறுவதில் தாமதமும், சிரமமும் ஏற்படுகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் திருச்சிக்குச் செல்வதைவிட, அதிகம் விரும்புவது அரியலூரைத்தான். ஏனெனில், ரயில் பயண நேரம் குறைவதைவிட, கட்டணமும் குறைகிறது.
இன்றைக்கும், அரியலூர் ரயில் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளின் எண்ணிக்கை கனிசமான அளவில் இருக்கும்.
குறிப்பாக, திருச்சியிலிருந்து தினமும் காலை 6.30 மணிக்குப் புறப்படும் பல்லவன் அதிவிரைவு ரயில் காலை 7.32 மணிக்கும், மதுரையிலிருந்து திருச்சி வழியாக வரும் வைகை அதிவிரைவு ரயில் காலை 10.05 மணிக்கும் அரியலூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
இதேபோல, மேலும் சில விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும், சென்னையிலிருந்தும் திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களும் அரியலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
பல்லவன் அதிவிரைவு ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்காக தஞ்சையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அரியலூர் ரயில் நிலையத்துக்கு காலை 7.15 மணி முதல் 7.20 மணிக்குள் வந்தடையும் வகையிலும், வைகை அதிவிரைவு ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்காகவும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, இரவு நேரத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு பயணச் சீட்டு பெறுவதற்கும், முன்பதிவில்லாத பயணச் சீட்டு பெறுவதற்கும் தனித்தனியே கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், 2009, தீபாவளிக்குப் பிறகு முன்பதிவில்லாத கவுன்டரில் பணியாற்றி வந்த பணியாளர், பணியிடமாறுதலில் சென்றுவிட்டார். அதன் பிறகு, அந்த இடத்துக்கு வேறு பணியாளர் நியமிக்கப்படவில்லை. எனவே, ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
இதனால், காலையில் பல்லவன், வைகை அதிவிரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பயணச் சீட்டு பெறுவதற்கும், ரயில் நிலைய நடைமேடை பயணச் சீட்டு பெறுவதற்கும் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது.
ஏற்கெனவே தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என வரும் ரயில் பயணிகள், அரியலூருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, ரயில் நிலையத்துக்கு வந்தால், அங்கு பயணச் சீட்டு பெறுவதில் ஏற்படும் தாமதத்தால், பலர் ரயிலை தவறவிடும் நிலை ஏற்படுகிறது.
எனவே, அரியலூர் ரயில் நிலையத்தில் முன்பதிவில்லாத பயணச் சீட்டு பெறும் பகுதியில் காலியாக உள்ள இடத்துக்கு உரிய பணியாளரை விரைவாக பணியமர்த்த வேண்டும்.
அறிவிப்பு அப்படியே இருக்கு: முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு அரியலூர் ரயில் நிலையத்தை முன்மாதிரி ரயில் நிலையமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிவிட்டுச் சென்றார். அவரின் அறிவிப்பு அப்படியேதான் உள்ளது. ஒரு மாவட்டத் தலைநகரில் உள்ள ரயில் நிலையத்துக்கான எந்த அடிப்படை வசதிகளும் இங்கு செய்யப்படவில்லை.
நடைமேடைகள் மட்டும் சரியாக அமைத்தால் போதாது. பயணிகளுக்குத் தேவையான எந்த வசதிகளும் இங்கு இல்லை. நல்ல குடிநீர் இங்கு கிடைப்பதில்லை. இங்குள்ள உணவகம் பழங்காலத்து கடைபோல காட்சியளிக்கிறது.
கூடுதல் பேருந்து வசதி:
ரயில்வே நிர்வாகம், ரயில் நிலையத்துக்குள் வருவதற்கு குறிப்பிட்ட பேருந்துகளுக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சில குறிப்பிட்ட ரயில்களில் வரும் பயணிகள் மட்டுமே பேருந்துகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால், மற்ற ரயில்களில் வருபவர்கள் நீண்ட தொலைவு நடந்து சென்று, ஆட்டோவிலோ அல்லது பெரம்பலூரிலிருந்து அரியலூருக்குள் வரும் பேருந்துகளிலோதான் ஏறிச் செல்ல வேண்டும்.
இந்த நிலையைத் தவிர்க்க, அரியலூரிலிருந்து பெரம்பலூருக்கும், பெரம்பலூரிலிருந்து அரியலூருக்கும் வந்து செல்லும் அனைத்து பேருந்துகளையும் ரயில் நிலையத்துக்குச் சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

வார பலன்கள் - மீனம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

