அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துணை முதல்வரால் திறக்கப்பட்ட எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

புதுக்கோட்டை, பிப். 7:   புதுக்கோட்டை நகராட்சி சார்பில் போஸ்நகர் மயானத்தில் அமைக்கப்பட்டு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா கண்ட நவீன எரிவாயு தகன மேடை இதுவரை ப

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:24 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை, பிப். 7:   புதுக்கோட்டை நகராட்சி சார்பில் போஸ்நகர் மயானத்தில் அமைக்கப்பட்டு, துணை முதல்வர் மு.க. ஸ்டாலினால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறப்பு விழா கண்ட நவீன எரிவாயு தகன மேடை இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.

   புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் சுமார் 1.5 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் மரணமடையும் அனைத்துத் தரப்பினரினரின் இறுதிச் சடங்குகளும் நகரைச் சுற்றி உள்ள பல்வேறு மயானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

  அதில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மயானம் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போஸ்நகர் மயானம்தான். மக்கள் தங்கள் வழக்கத்துக்கு ஏற்ப இறந்தவர்களை புதைப்பதையும், எரியூட்டுவதையும் இறுதிச்சடங்காக மேற்கொண்டு வருகின்றனர்.

  அதில், புதைப்பதைவிட எரியூட்டுவதற்கு செலவு அதிகமாகும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இட நெருக்கடியும், கால விரயமும், பொருள் செலவும் அதிகரித்துவிட்டது.

   இந்நிலையில், பல நகரங்களில் உள்ளதைப்போல நவீன தகன மேடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்தது. இக் கோரிக்கையை நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த 2006-07-ம் ஆண்டில் சுமார் ரூ. 49 லட்சத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, போஸ்நகர் மயானத்தில் அதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கி, கடந்த 2010-ல் நிறைவடைந்தது.

   அதைத் தொடர்ந்து, கடந்த 30.7.2010-ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற துணை முதல்வர்  ஸ்டாலின் திறந்துவைத்த பல்வேறு கட்டடங்களில் இதுவும் ஒன்று. ஆனால், திறப்பு விழா கண்டு சுமார் 6 மாதங்கள் கடந்த பிறகும் எரிவாயு தகன மேடை இதுவரை மக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை.

   இதுதொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர் சுப. சரவணன் உள்பட பலர்  பிரச்னை எழுப்பினர்.

  அதற்குப் பதிலளித்த நகராட்சி அதிகாரிகள், எரிவாயு தகனமேடைப் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், அந்த அமைப்பில் ஒரு சிறிய கருவியை பொருத்துவது மட்டுமே நிலுவையில் உள்ளது என்றும், அடுத்த மாதம் நவீன எரிவாயு தகன மேடை இயங்கத் தொடங்கும் என்றும் விளக்கம் அளித்தனர்.

   இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர் சண்முக பழனியப்பன் கூறியது:

   நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும், அதைத் திறப்பதில் என்ன தாமதம், முக்கியப் பிரமுகர் எவரும் வந்து திறந்துவைக்க வேண்டுமா? என கடந்த ஆண்டிலேயே நகர் மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன்.  

  எனினும், எதையுமே பொருள்படுத்தாத நகராட்சி நிர்வாகத்தால் பதவிக் காலம் முடிய சில மாதங்களே உள்ள நிலையில், என்ன பயன் விளையப் போகிறது என்றார் அவர்.

  இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் கூறியது:

 எரிவாயு தகன மேடையில் நிலுவையில் இருந்த பணிகள் முடிந்துவிட்டன. இந்தப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பல ஊர்களில் இதே போன்ற பணியைச் செய்து வருவதால், அவர் வந்து இங்குள்ள தகன மேடையை இயக்கி முன்னோட்டம் செய்து காண்பித்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.