ஜன. 25-ம் தேதியை வாக்காளர் தினமாக கொண்டாட முடிவு

புதுக்கோட்டை, ஜன. 8:   ஜனவரி 25 ஆம் தேதியை வாக்காளர் தினமாகக் கொண்டாடுவது என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.   புதுகை மாவட்ட ஆட்சிய
Updated on
1 min read

புதுக்கோட்டை, ஜன. 8:   ஜனவரி 25 ஆம் தேதியை வாக்காளர் தினமாகக் கொண்டாடுவது என புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆ. சுகந்தி முன்னிலையில்  நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல்  மேற்பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் ஏ. சித்தரஞ்சன்  மோகன்தாஸ் தலைமை வகித்தார்.

  வருகிற 2011 சட்டப்பேரவை பொதுத் தோóதலை முன்னிட்டு, தலைமை தேர்தல் ஆணையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாகவும், முகவர்களை நியமிப்பது தொடர்பாகவும், முகவர்கள் பணிகள் குறித்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

  முன்னதாக, புதுக்கோட்டை நகராட்சியைச் சேர்ந்த திருக்கோகர்ணம்  துவக்கப்பள்ளி, அரசு உயர் துவக்கப் பள்ளி, அரசு தொழில் பயிற்சி மையம் ஆகிய வாக்குப் பதிவுச் சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ. சித்தரஞ்சன் மோகன்தாஸ் அறிவுறுத்தினார்.

  இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆ. சுகந்தி பேசியது:

  தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் வாக்குச் சாவடி அளவிலும் வட்ட, கோட்ட மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். 10.1.2011 ஆம் தேதி வெளியாகவுள்ள துணை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றார் அவர்.

  கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடது சாரிகட்சிகள் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சு. ராமதாசு,  வருவாய்க் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com