புதுக்கோட்டை, ஜன. 8: புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை அருகேயுள்ள மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் நா. சாமிநாதன் (66). இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இருவர், வீட்டில் இருந்தவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 13 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனராம்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எம். முத்துச்சாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கஜபதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.