பொங்கல்: ஜன. 12 முதல் கூடுதல் பேருந்துகள்
திருச்சி, ஜன. 8: "பொங்கலையொட்டி, ஜனவரி 12 முதல் 19-ம் தேதி வரை திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை, திண்டுக்கல், பழநி, விழுப்புரம், அரியலூர், ஜயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்து


திருச்சி, ஜன. 8: "பொங்கலையொட்டி, ஜனவரி 12 முதல் 19-ம் தேதி வரை திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை, மதுரை, திண்டுக்கல், பழநி, விழுப்புரம், அரியலூர், ஜயங்கொண்டத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அரசுப் போக்குவரத்துக் கழக (குடந்தை கோட்டம்) பொது மேலாளர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 11 முதல் மாவட்ட
விளையாட்டுப் போட்டிகள்
திருச்சி, ஜன. 8: திருச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 11 முதல் 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
÷ "கிராம ஆண், பெண்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, ஊக்குவிக்க மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, 2010-11 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அளவில் அண்மையில் நடைபெற்றன. இதையடுத்து, மாவட்ட அளவில், மாநில விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் வரும் ஜன.
11- ம் தேதி தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.
ஜன. 11 காலை 8 மணிக்கு கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல் ஆகிய போட்டிகளும், ஜன. 12 ஆம் தேதி தடகளப் போட்டிகளும், 13 ஆம் தேதி கபடிப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...