மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் வரை போராட்டம்

அரியலூர், ஜன. 8: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.      அரியலூரில் வெள்ளிக்கிழமை அந்தக் கழகத்த
Updated on
1 min read

அரியலூர், ஜன. 8: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

     அரியலூரில் வெள்ளிக்கிழமை அந்தக் கழகத்தின் அரியலூர் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

     கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

     முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சலுகை  வெறும் கண் துடைப்பாகும். இந்த அறிவிப்பு ஏமாற்றறம் அளிக்கிறது. மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்ககம் அமைக்க வேண்டும்.

  அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுநிலைத் தமிழாசிரியர் பணியிடம் உள்ளிட்ட 10 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை வழங்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர வேண்டும்.     அரியலூர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டாய்வுச் செய்யும் போது, முதன்மைக் கல்வி அலுவலர்தான் ஆய்வு செய்ய வேண்டும். தலைமையாசிரியர்களைக் கொண்டு ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     கூட்டத்துக்கு கழகத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.    கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் கு. மாயவன், ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.  கூட்டத்தில் அரியலூர் கல்வி மாவட்டத் தலைவர் அ. அக்பர்கான், செயலர் பா. மல்லிகேசுவரன், உடையார்பாளையம் கல்வி மாவட்டத் தலைவர் க. ராஜ்குமார், செயலர் கோ. ராஜேந்திரன், பொருளாளர் ந. பஞ்சமூர்த்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மு. சேகர், ந. ஜோதிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.    முன்னதாக, கழகத்தின் மாவட்டச் செயலர் சி. பிச்சைப்பிள்ளை வரவேற்றார். மாவட்டப் பொருளளர் பி. பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com