வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேமுதிக செயலரை கத்தியால் குத்திய பாஜக பிரமுகர் கைது

திருத்துறைப்பூண்டி, ஜன. 8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலரைக் கத்தியால் குத்திய பாஜக பிரமுகரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.     முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலராக எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருத்துறைப்பூண்டி, ஜன. 8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலரைக் கத்தியால் குத்திய பாஜக பிரமுகரை போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை ஒன்றிய தேமுதிக செயலராக எடையூர் கடைவீதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் முருகேசன் (35) இருந்து வருகிறார்.    இந்நிலையில், பாஜக சார்பில் சென்னையில் ஜனவரி 29-ல் நடைபெற உள்ள தாமரை யாத்திரையின் நிறைவு விழா குறித்து அக் கட்சியினர் விளம்பரம் செய்திருந்தனராம். அந்த விளம்பரத்தை அழித்துவிட்டு தேமுதிக சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநாடு குறித்து முருகேசன் தரப்பினர் எழுத முயன்றது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டதாம்

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை முத்துப்பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த முருகேசனை, பாஜக ஒன்றியச் செயலர் தமிழ்ச்செல்வன் மற்றும் நான்கு பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனங்களில் வந்து வழிமறித்து, தாக்கி கத்தியால் குத்தினராம்.       இதில் தொடைப் பகுதியில் பலத்த காயமடைந்த முருகேசன் திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முத்துப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து, தமிழ்ச்செல்வனைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.