திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் சிறப்பு முகாம்கள்

அரியலூர், ஜன. 8: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.     மத்திய அரசின் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை வழங்கும் திட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

அரியலூர், ஜன. 8: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

    மத்திய அரசின் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த முகாம்களில் முதலாவதாக அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    முகாமை மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி தொடக்கி வைத்து, 5 பேருக்கு உதவித் தொகைப் பெறுவதற்கான ஆணையையும், புங்கங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளர் மணிவண்ணனுக்கு சக்கர நாற்காலியையும் வழங்கினார்.     முகாமில் தனித் துணை ஆட்சியர்(மககள் குறைகேட்பு) ரகமத்துல்லாகான், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் என். செல்வராஜ், கோட்டாட்சியர் ரா. ஜீவரத்தினம், வட்டாட்சியர்கள் கோவிந்தராஜுலு, தண்டாயுதபாணி, மருத்துவர் கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   அரியலூரைத் தொடர்ந்து, திருமானூரில் ஜன.22, செந்துறையில் பிப்.12, ஜயங்கொண்டத்தில் பிப்.26, தா.பழூரில் மார்ச்.5,

ஆண்டிமடத்தில் மார்ச்.19 ஆகிய தேதிகளில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனறார் ஆட்சியர் தி.க. பொன்னுசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.