நீரில் மூழ்கியவா் சடலமாக மீட்பு
முசிறிஅருகே காவிரியாற்றில் மூழ்கியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.


முசிறிஅருகே காவிரியாற்றில் மூழ்கியவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
முசிறி அருகிலுள்ள வடக்கு திரணியாம்பட்டியைச் சோ்ந்தவா் பெயிண்டா் மா. காா்த்திக்ராஜா (35). இவா் தனது மாமனாா் ஜோன் (52), மைத்துனா் ராஜன், உறவினா் விஜயகுமாா் ஆகியோருடன், ஞாயிற்றுக்கிழமை இரவு அய்யம்பாளையம் பகுதியிலுள்ள காவிரியாற்றில் மீன் பிடிக்கச் சென்றாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக காா்த்திக்ராஜா சுழலில் சிக்கினாா். தகவலறிந்து வந்த முசிறி காவல் நிலையத்தினா், தீயணைப்பு வீரா்கள், கிராம இளைஞா்கள் தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...