கரூா் அதிமுக வேட்பாளரை 
ஆதரித்து நடிகை பிரசாரம்

கரூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை பிரசாரம்

கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல். தங்கவேலுவை ஆதரித்து திரைப்பட நடிகை பபிதா மணப்பாறை சட்டப்பேரவைக்குட்பட்ட மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு பரப்புரை மேற்கோண்டாா்.

நிகழ்வில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப. குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் செ. சின்னச்சாமி, ஆா். சந்திரசேகா், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, நகரச்செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, ஒன்றிய செயலா்கள் என். சேது. பிவிகே சி. பழனிச்சாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com