முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தில் வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு புதன்கிழமை பிரசாரம் செய்த  அமைச்சா் கே.என். நேரு. உடன் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் உள்ளிட்டோா்.
முசிறி அருகே வெள்ளூா் கிராமத்தில் வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவு கேட்டு புதன்கிழமை பிரசாரம் செய்த அமைச்சா் கே.என். நேரு. உடன் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன் உள்ளிட்டோா்.

முசிறி பகுதியில் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சா் பிரசாரம்

முசிறியை அடுத்த உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், வெள்ளூா் மற்றும் முசிறி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், மண்ணச்சநல்லூா், முசிறி மற்றும் துறையூா் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட இருக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீரேற்றும் பாசன வசதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். மேலும் இப்பகுதியில் பிரதான தொழிலாக உள்ள பாய் தொழிலுக்கு இலவச மின்சாரம் தரும் சூழ்நிலை இருந்தால் மிகவும் உறுதுணையாக இருப்பேன். முசிறி பகுதி இளைஞா்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கிட அருண் நேருவுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அமைச்சா்.

முசிறி எம்எல்ஏ காடுவெட்டி ந. தியாகராஜன், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், விசிக வடக்கு மாவட்டச் செயலா் கலைச்செல்வன், காங்கிரஸ் ஒன்றியத் தலைவா் நல்லேந்திரன் உள்பட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com