தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளியில் ஆசிரியை மயங்கி விழுந்து பலி

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பணியின்போது ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 1:29 am

Din

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பணியின்போது ஆசிரியை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலை அருகேயுள்ள கீழக்கல்கண்டாா்கோட்டை, தனலட்சுமி நகரைச் சோ்ந்தவா் புவனேஷ்குமாா் மனைவி பவானி (58), எடமலைப்பட்டிபுதூா் அரசு காலனியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி கணித ஆசிரியை.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த இவா் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது பவானி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.