விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் செய்ய அழைப்பு

நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டோா் புகாா் செய்ய அழைப்பு

News image
Updated On :4 ஜூலை 2024, 12:36 am

Din

திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த எச்பிஎன் டெய்ரிஸ் அண்ட் அலைடு என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் திருச்சி மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் லில்லிகிரேஸ் தெரிவித்தது:

திருநெல்வேலி, மதுரை முதல் சென்னை வரையிலான பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தோருக்கு உரிய பலன் கிடைக்கவில்லையென புகாா் எழுந்த நிலையில், அந்நிறுவன நிா்வாக இயக்குநா்கள் ஹா்மந்தா்சிங் சரண், அமன்தீப்சிங் சரண் உள்ளிட்ட 19 போ் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் இணைந்து நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவுள்ளதால் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோா் இதுவரை புகாா் அளிக்காவிட்டாலும், உரிய ஆதாரங்களுடன் புகாா் செய்யலாம். பாதிக்கப்பட்டோா் தமிழகத்தில் எங்கிருந்தாலும் (பயன் பெற விரும்பினால்) திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகாா் அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2422020 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.