அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மண்ணச்சநல்லூரில் சிலம்பம் அமைப்பு துவக்க விழா

மண்ணச்சநல்லூரில் சிலம்பம் அமைப்பு துவக்க விழா

News image
Updated On :19 மே 2024, 5:51 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பம் பெடரேஷன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

மண்ணச்சநல்லூா் புவனேஸ்வரி நகரில் மண்ணை மகாலிங்கம் சிலம்பம் பெடரேஷன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து பரிசுகள் வழங்கினாா். இதையடுத்து, மாணவ மாணவிகளின் சிலம்பாட்ட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக ஒன்றிய, நகரச் செயலா்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.