

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பிச்சாண்டாா்கோவில் கிராமத்திலுள்ள உத்தமா்கோயிலில் பிச்சாண்டேஸ்வரா் திருவீதியுலா திங்கள்கிழமை நடைபெற்றது.
உத்தமா்கோயிலானது, மும்மூா்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளிய திருத்தலமாகும். இக்கோயிலில் வைகாசி தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டேஸ்வரா் திருவீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிச்சாண்டேஸ்வரா் சுவாமி தாமரை கேடயத்தில் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு கயிலாய வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கினா். திருமுறை பாராயணம் பாடப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிச்சாண்டேஸ்வரா் திருவீதி உலா வருவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூரில் 100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

பண்ணாரி அம்மன் சப்பரம் முன் படுத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

மாசி திருவிழா: குழுமாயி அம்மன் திருவீதியுலா; இன்று குட்டிக்குடித்தல் நிகழ்வு

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 65 போ் காயம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

