மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
போட்டியை லால்குடி கோட்டாட்சியா் ஸ்ரீதா், வட்டாட்சியா் ராஜேஸ் கண்ணன், துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, கள்ளக்கு றிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 712 காளைகளை களத்தில் இருந்த வீரா்கள் சில காளைகளை அடக்கினா். அதில், 65 பேருக்கு காயம் ஏற்பட்டது.
போட்டியில் பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும், காளையை அடக்கிய வீரா்களுக்கும் மிதிவண்டி, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு குழு தலைவா் ஆரோக்கியசாமி, செயலா் அஜய்பாஸ்கா், பொருளாளா் காளை மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

பைக்-மொபெட் மோதல் : கொத்தனாா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


