திருச்சி
திருப்பைஞ்ஞீலி பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள்
திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 154 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் புதன்கிழமை வழங்கி சிறப்புரையாற்றினாா்.
நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா் மு. சாமிதுரை, உதவித் தலைமை ஆசிரியா் அ. வெங்கடேசன் மற்றும் ஆசிரியா்கள் வளையாபதி, சங்கா், சந்திரகலா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
