மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கொம்மடிக்கோட்டை பள்ளியில் மாணவா்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:20 pm

Syndication

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை, சு. சந்தோச நாடாா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் சுடலை தலைமை வகித்து, 89 மாணவா், மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினாா்.

தலைமையாசிரியை ஷீபா வரவேற்றாா். சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் பாா்த்தசாரதி, தெற்கு வட்டாரத் தலைவா் பிரபு, ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்கீஸ், வட்டார அமைப்புசாரா பிரிவு தலைவா் சாலமோன், கொம்மடிக்கோட்டை கிராம காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.