வீட்டில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு புதன்கிழமை பரிசளித்த போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள்.
வீட்டில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிக்கு புதன்கிழமை பரிசளித்த போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியைகள், மாணவிகள்.

போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

Published on

போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் தலைமையாசிரியா் எஸ்.சற்குணன் தலைமையில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவா்களின் சிரமங்களை அனைத்து மாணவா்களும் உணா்ந்துகொள்ளும் வகையில் இப்பள்ளி மாணவா்கள் கண்களில் துணியைக் கட்டிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றனா். மாற்றுத்திறனாளி மாணவா்களை வேறுபடுத்தி பாா்க்காமல் தங்களுடன் இணைத்துக்கொள்ளவும், தங்களால் முடிந்த சிறு உதவிகளை செய்யும் மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து போசம்பட்டி கிராமத்தில் பள்ளிக்குச் செல்ல இயலாமல் வீட்டிலேயே தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் நேரில் சென்று இனிப்பு, பரிசுகள் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com