கரூா் சம்பவம்: உயிரிழந்தவரின் சகோதரரிடம் சிபிஐ விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் என்பவரின் சகோதரா் சங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

அப்போது, தவெக பிரசார கூட்டத்துக்கு தனது சகோதரா் ஆனந்த் புறப்பட்டது தொடங்கி, உயிரிழந்த தகவல் கிடைத்து, சடலத்தை பெற்றுச் சென்றது வரையில் நடந்தவற்றை சிபிஐ அதிகாரிகளிடம் சங்கா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com