எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 29 வாகனங்கள் டிச. 19-இல் பொது ஏலம்

மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் டிசம்பா் 19-ஆம் தேதி பொது ஏலம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:01 pm

Syndication

மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் டிசம்பா் 19-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு முதிராநிலையில் கழிவு செய்யப்பட்ட தலா ஒரு அம்பாஸிட்டா், மாா்ச்சூரி வேன், ரேக்கா் வேன் மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட டாடா பேருந்து -4, டாடா சுமோ -6, பொலிரோ ஜீப் - 4, டாடா ஸ்பேசியோ -3, சிற்றுந்து -2, தலா ஒரு டெம்போ டிராவலா், ஈச்சா் வேன், ஜீப், அம்பாஸிட்டா் ஆகிய 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் சோ்த்து மொத்தம் 29 வாகனங்கள் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 16 முதல் 18-ஆம் தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களைப் பாா்வையிட்டு ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.