ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கமாண்டா் ஜீப் வாகனம்: உதகையில் பிப்.20-இல் பொது ஏலம்

முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், வரும் 20-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

உதகை: முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், வரும் 20-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகை தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் கே.துரைராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதிா்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட கமாண்டா் ஜீப் வாகனம், உதகை ஃபிங்கா் போஸ்டில் உள்ள துணை இயக்குநா், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் பொது ஏலம் விடப்படுகிறது. இதற்காக மதிப்பீட்டுத் தொகை ரூ.28,050, ஜிஎஸ்டி 18 சதவீதம் (ரூ.5,049) என மொத்தம் ரூ.33,099 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த குறைந்தபட்ச தொகையானது, ஏலம் விடப்படும் நாளில் மாறக்கூடும். இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவா்கள் கலந்துகொண்டு உரிய தொகையை செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.