துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (டிச. 22) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் புத்தனாம்பட்டி, ஓமாந்தூா், அபினிமங்கலம், சாத்தனூா், திண்ணனூா், இலுப்பையூா், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூா், கோட்டாத்தூா், து. களத்தூா், தேனூா், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.