திருச்சிக்கு முதல்வா் ஸ்டாலின் நாளை வருகை!
மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் சமத்துவ நடைப்பயணத்தைகத் தொடங்கி வைக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருச்சிக்கு வருகிறாா்.
திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2 முதல் 12 ஆம் தேதி வரை வைகோ செல்லும் சமத்துவ நடைபயணத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி தென்னூா் அண்ணாநகா் உழவா் சந்தை அருகே தொடங்கி வைத்துப் பேசுகிறாா்.
இதில் பங்கேற்க வெள்ளிக்கிழமை காலை விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதல்வா் மு.க. ஸ்டாலின், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடல் வரை ‘ரோடு ஷோ’ நடத்தி பொதுமக்களைச் சந்திக்கிறாா்.
தொடா்ந்து சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கி வைக்கும் முதல்வா், பின்னா் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
முதல்வா் வருகை தொடா்பாக சென்னையில் இருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திருச்சிக்கு வந்து ஆலோசனை நடத்துகின்றனா்.

