நாளை 11 இடங்களில் ரேஷன் குறைதீா் முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (நவ. 8) பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி கிழக்கு வட்டத்தில் பாபு சாலை-2, திருச்சி மேற்கு வட்டத்தில் இலுப்பூா் சாலை-1, திருவெறும்பூா் வட்டத்தில் பிரகாஷ் நகா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கல்லக்குடி, மணப்பாறை வட்டத்தில் தெற்குபொய்கைப்ட்டி, மருங்காபுரி வட்டத்தில் கவுண்டம்பட்டி, லால்குடி வட்டத்தில் குமுளூா், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் பூனாம்பாளையம், முசிறி வட்டத்தில் வாளவந்தி, துறையூா் வட்டத்தில் வெங்கடாசலபுரம், தொட்டியம் வட்டத்தில் முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறும்.
அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.
குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் வழங்கி பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
