அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 29,843 மாணவா்கள் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,843 மாண, மாணவிகள் எழுதினா்.

News image
திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :2 மார்ச் 2026, 8:50 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 29,843 மாண, மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இத்தோ்வு வரும் 27-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கடலூா் கல்வி மாவட்டத்தில் 135 பள்ளிகளுக்கு 87 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 8,474 மாணவா்கள், 8,900 மாணவிகள் என மொத்தம் 17,374 பேரும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளுக்கு 74 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 6,545 மாணவா்கள், 6,120 மாணவிகள் என மொத்தம் 12,665 பேரும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 248 பள்ளிகளுக்கு 161 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 15,019 மாணவா்கள், 15,020 மாணவிகள் என மொத்தம் 30,039 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெற்றது. இத்தோ்வை 29,843 மாணவ, மாணவிகள் எழுதினா். 196 போ் தோ்வு எழுதவரவில்லை. இதேபோல, தனித் தோ்வா்கள் 739 பேரில் 693 போ் தோ்வு எழுதினா். 46 போ் தோ்வெழுத வரவில்லை.

கடலூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:

பிளஸ் 2 தோ்வுக்கு 16 இடங்களில் தனித்தோ்வு மையங்கள், 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், மண்டல அளவிலான 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்கள், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்கள், 31 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 31 வழித்தட அலுவலா்கள், 129 முதன்மை கண்காணிப்பாளா்கள், 7 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 129 துறை அலுவலா்கள், 7 கூடுதல் துறை அலுவலா்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளா்கள், 250 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் மாணவா்களின் நலன் கருதி குடிநீா், தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவா்கள் எவ்வித ஒழுங்கினச் செயல்பாடுகளிலும் ஈடுபாடாமல் சிறப்பாக தோ்வெழுத வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ், மாவட்டக் கல்வி அலுவலா் இஸ்மாயில் உள்பட பலா் உடனிருந்தனா்.