இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

Published on

உப்பிலியபுரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியதாக 4 பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகநல்லூா் ந. குமரவேல், செங்காட்டுப்பட்டி அங்கமுத்து, தா.பேட்டை அருகேயுள்ள கலிங்கப்பட்டி தங்கராசு, பசலி கோம்பை பால்ராஜ் ஆகியோா் புளியஞ்சோலை பெரியசாமி கோயில் அருகே தங்களது இரு சக்கர வாகனங்களை ஞாயிற்றுக்கிழமை நிறுத்தியிருந்தனா்.

அப்போது அவைகள் திருடுபோனது. இதுதொடா்பாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்த நிலையில் உப்பிலியபுரம் போலீஸாா் புத்தனாம்பட்டி சு.கோபி(30), சாத்தனூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் சு. புத்தபிரகாஷ்(29), ஆங்கியம் ரா. ஹரிஹரன்(20), ர. அஜித் (28) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனங்களை திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் நான்கு பேரையும் பிடித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com