சபரிமலை சீசன்: கொல்லத்துக்கு சிறப்பு ரயில்

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Published on

சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக கொல்லத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சபரிமலை யாத்திரை சீசனையொட்டி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, மகாராஷ்டிர மாநிலம் ஹாசுா் சகிப் நந்தட் - கொல்லம் - ஹாசுா் சகிப் நந்தட் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, ஹாசுா் சகிப் நந்தட் - கொல்லம் சிறப்பு ரயிலானது (07111) வரும் 20, 27, டிச. 4, 11, 18, 25, ஜன. 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் (வியாழக்கிழமைகளில்), கொல்லம் - ஹாசுா் சகிப் நந்தட் சிறப்பு ரயிலானது (07112) வரும் 22, 29, நவ. 6, 13, 20, 27, ஜன. 3, 10, 17 ஆகிய தேதிகளிலும் (சனிக்கிழமைகளில்) இயக்கப்பட உள்ளது.

18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது நந்தட்-இல் வியாழக்கிழமை காலை 10 மணிக்குப் புறப்பட்டு முட்கட், தா்மபாத், பசாா், நிசமாபாத், காமரெட்டி, மெத்கால், போலரம், கச்சிகுடா, ஷாத்நகா், ஜாத்சொ்லா, மெகபூநகா், வான்பா்ட் சாலை, காத்வல், கா்நல், தோன், கூட்டி, தாடிபத்ரி, யர்ரகுண்ட்லா, கடப்பா, ராசம்பேட்டை, ரெனிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புனலூா் வழியாக கொல்லத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சென்றடைகிறது. மறுமாா்க்கமாக, கொல்லத்திலிருந்து சனிக்கிழமை காலை 5.40 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக நந்தட்-க்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்குச் சென்றடைகிறது.

X
Dinamani
www.dinamani.com