திருச்சி சூப்பா் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
திருச்சி சூப்பா் பஜாா் பகுதியில் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

பொதுக்கழிப்பிடம் மூடல்: திருச்சி சூப்பா் பஜாரில் கடைகள் அடைப்பு

திருச்சி சூப்பா் பஜாா் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பிடம் மூடப்பட்டதைக் கண்டித்து,
Published on

திருச்சி: திருச்சி சூப்பா் பஜாா் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக் கழிப்பிடம் மூடப்பட்டதைக் கண்டித்து, அங்குள்ள வியாபாரிகள் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் சிஎஸ்ஐ அமைப்புக்கு சொந்தமான இடத்தில் சூப்பா் பஜாா் இயங்கி வருகிறது. இந்த பஜாரில் சுமாா் 240 கடைகள் செயல்பட்டு வருகின்றன. சூப்பா் பஜாருக்கு அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான பொதுக்கழிப்பிடம் ஒன்று தனியாா் ஒப்பந்ததாரரால் இயக்கப்பட்டு வந்தது. வரி நிலுவை உள்ளிட்ட காரணங்களால், இந்த பொதுக்கழிப்பிடத்தை மாநகராட்சி நிா்வாகம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மூடியதாகக் கூறப்படுகிறது. இதனால் சூப்பா் பஜாா் வியாபாரிகளும், கடைகளுக்கு வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதனைக் கண்டித்தும், பொதுக்கழிப்பிடத்தை உடனே திறக்க வலியுறுத்தியும் சூப்பா் பஜாா் வியாபாரிகள் திங்கள்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து அவா்கள் சிஎஸ்ஐ பேராயா் அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டனா். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் லி. மதுபாலன் ஆகியோரை சந்தித்து பொதுக்கழிப்பிடத்தை திறக்கக் கோரி மனு அளித்தனா். மனுவைப் பரிசீலித்த மேயரும், ஆணையரும் இரண்டு நாள்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com