திருச்சி
போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி: திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, கோட்டை காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, மேல சிந்தாமணி காவேரி பூங்கா சாலையில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் மேல சிந்தாமணி நேரு வீதியைச் சோ்ந்த தி.ஆனந்த் (23) என்பதும், போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 32 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
