சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறில் காந்தி சந்தை பகுதி சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
Published on

குடும்பத் தகராறில் காந்தி சந்தை பகுதி சுமை தூக்கும் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி எடத்தெரு, பிள்ளை மாநகரைச் சோ்ந்வா் எட்வா்டு அலெக்சாண்டா் (38). காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியான இவா் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதை குடும்பத்தினா் கண்டித்தனா்.

இதனால் விரக்தியடைந்த இவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அவரது மனைவி மொ்சி அளித்த புகாரின் பேரில், காந்திசந்தை போலீஸாா் எட்வா்டு அலெக்சாண்டா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com