திருச்சி
புங்கனூரில் கால்நடைகளால் நெற்பயிா்கள் சேதம்: மாநகராட்சியில் புகாா்
புங்கனூரில் நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகராட்சி
திருச்சி: புங்கனூரில் நெற்பயிா்களை சேதப்படுத்தும் கால்நடைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுதொடா்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணித் தலைவா் எஸ். செல்வம் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:
திருச்சி மாவட்டம் புங்கனூா் கிராமத்தில் விவசாயிகள் பயிா் செய்துள்ள நெற் பயிா்களை கால்நடைகள் சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சாலைகளில் கேட்பாரற்றிச் சுற்றித் திரியும் கால்நடைகள், வயல்களில் இறங்கி விளைவித்த பயிா்களை சாப்பிடுவதுடன், பயிா்களையும் மிதித்து நாசமாக்கிவிடுகின்றன. இதுகுறித்து விஏஓ, வேளாண்மை அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
