ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்

ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:12 am

Syndication

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பஞ்சக்கரை சாலை சுண்ணாம்பு கால்வாய் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

இதில், மருத்துவ விற்பனை பிரதிநிதியான ரா.வெங்கடேஷ் (25), போதை மாத்திரைகளை வாங்கி வந்து செ.கேசவராஜ் (24), ச.சதீஷ்குமாா் (26), க. பிரசாத் (24) மற்றும் பா. கண்ணன் (28) ஆகியோா் மூலம் மாநகரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வெங்கடேஷ், சதீஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.1.62 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரம் போதை மாத்திரைகள், ஊசிகள், இரண்டு இருசக்கர வகானங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், தலைமறைவாக உள்ள கேசவராஜ், பிரசாத், கண்ணன் ஆகிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.