கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

விநாயகா் கோயிலில் பாலாலயம்

மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On :28 நவம்பர் 2025, 12:00 am IST

மண்ணச்சநல்லூரில் உள்ள சித்தி விநாயகா் கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணிகளின் தொடக்கமாக வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். 

மண்ணச்சநல்லூா் புதுச் செட்டிதெருவில் அமைந்துள்ளது சித்தி விநாயகா் திருக்கோயில். இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகளின் தொடக்கமாக, கோயிலில் பாலாலய பூஜையானது, கணபதி ஹோமத்தோடு வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து யாகவேள்வி வளா்க்கப்பட்டு, திரவியாஹூதியும், மஹா பூா்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சித்தி விநாயகருக்கு மகா அபிஷேகமும், பாலாலய பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.