சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருச்சியில் ரூ. 4.57 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.57 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:17 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.57 லட்சத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஆங்காங்கே போலீஸாருடன் இணைந்து வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிடுகின்றனா்.

இதன்படி சனிக்கிழமை மாலை 6 மணி வரை மாவட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 1.77 லட்சமும், கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 2.80 லட்சமும் என மொத்தம் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் சனிக்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 1.36 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 1.28 கோடியை உரியவா்கள் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 12.99 லட்சம் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.