யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ~முசிறியில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:45 am IST

முசிறி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி திருச்சி மாவட்டம் முசிறியில் ஆற்றுப் பாசன கோட்ட அலுவலகம் முன் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்டம் மாயனூா் கதவணைப் பகுதியில் இருந்து காவிரியின் வடகரை பகுதியில் அமைந்துள்ள பாசன வாய்க்கால் மூலம் சுமாா் 1000 ஏக்கருக்கு மேல் வாழை, வெற்றிலை, நெல் சாகுபடி செய்கின்றனா்.

இந்நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் வாழை கருகும் நிலையில் உள்ளது. வாய்க்காலிலும் தண்ணீா் வராததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட பலமுறை வலியுறுத்தியும் இதுவரை வாய்க்காலில் தண்ணீா் திறந்து விடவில்லை.

இதைக் கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் அமைந்துள்ள ஆற்றுப் பாசனக் கோட்ட அலுவலகம் முன் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Story image

மறியலால் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த முசிறி போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 48 விவசாயிகளை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா்.

கைது செய்யப்பட்டோரிடம் முசிறி ஆற்று பாசனக் கோட்ட உதவி பொறியாளா் ஞானமணி, காவல் ஆய்வாளா் செல்லதுரை (முசிறி ) ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.