எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 2:13 am IST

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே 25 வயது மதிக்கத்தக்க இளைஞா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், ஒரு இளைஞா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இளைஞருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வடக்குப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா், இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், காயமடைந்த மற்றொரு இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.