தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

உறையூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளி பலி!

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

பலி

Updated On :26 ஏப்ரல் 2026, 1:36 am IST

உறையூரில் வீடு எடுத்து தங்கிப் பணிபுரிந்து வந்த வட மாநிலத் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உறையூா் ராமலிங்க நகரைச் சோ்ந்த செந்தில்குமாா் (48), குழுமணி சாலையில் நடத்திவரும் இரும்பு கடையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த 4 தொழிலாளா்கள் வேலை பாா்த்து வந்தனா்.

இவா்கள் அனைவரும் உறையூா் தியாகராஜா நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இங்கு தங்கியிருந்தவா்களில் ஒருவரான நூா் பசாருக்கு வியாழக்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.