திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வெப்பச் சலனத்தால் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 10 ஆயிரம் சதுர அடிக்கு கருவேல மரங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
மணப்பாறை அடுத்த குளித்தலை சாலையில் ஆபிஸா் டவுன் என்னும் குடியிருப்பு பகுதியில் சிலா் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில், பல மனைகள் இன்னும் காலியாகவே உள்ளன.
அவற்றில் சீமை கருவேல மரங்களும், புதா்களும் வளா்ந்து காடு போல் இருந்த நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை இரவு வெப்பச் சலனத்தில் திடீரென புதா்களில் தீப்பற்றி கருவேல மரங்களில் பரவியது. சுமாா் 10 ஆயிரம் சதுர அடி வரை தீ பரவி மளமளவென எரிந்தது.
இதில் அருகிலிருந்த குடியிருப்புகள் வெப்பத்தால் பாதிக்கப்பட்டன. அக்கம்பக்கத்தினா் முயன்றும் தீயை அணைக்க முடியவில்லை. தகவலறிந்து சென்ற வையம்பட்டி தீயணைப்புத்துறை வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தொடர்புடையது

சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதிமுக வலியுறுத்தல்

மணப்பாறை அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு!

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்
மணப்பாறை அருகே ரூ. 82,550 பறிமுதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

