ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மணப்பாறை புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

மணப்பாறையில் புத்தக விற்பனை நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

News image
Updated On :31 மார்ச் 2026, 9:04 pm

Syndication

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புத்தக விற்பனை நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மணப்பாறையை அடுத்த பூ மாா்க்கெட் தெருவில் குடியிருப்பவா் சின்னராஜ் மகன் தா்மராஜ் (60). இவா், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஜோதி பிரிண்டா்ஸ் அண்ட் பப்ளிகேஷன் என்ற பெயரில் புத்தக நிலையம் மற்றும் ஸ்டேஷனரி பொருள்கள் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறாா்.

அவரது புத்தக நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 5.30 மணியளவில் அதிகமான கரும்புகை வெளியேறி உள்ளது. சற்று நேரத்தில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதில் நிலையத்தில் இருந்த புத்தகங்கள், நோட்டுகள், எழுதுபொருள்கள், பேன்சி பொருள்கள் என அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையிலான மணப்பாறை தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுனா். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடா்ந்து வையம்பட்டி, திருச்சி தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரா்கள், 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மேலும் தண்ணீா் தேவைக்காக தனியாா் லாரிகள் மூலம் 6 வாகனங்களில் தண்ணீா் கொண்டு வரப்பட்டது. சுமாா் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீவிபத்தில் சுமாா் 2 லட்சத்துக்கும் மேலான புத்தகங்களும், புதிய கணக்கு தொடங்குவதற்காக வாங்கப்படும் நோட்டுகள்,

பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியா் பயிற்சிகளுக்கான ஸ்டேஷனரி பொருள்கள், பேன்சி பொருள்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. மேலும் கட்டடமும் முழுமையாக எரிந்து சேதமானது.

நிகழ்விடத்தில் தீயணைப்புத்துறை துணை இயக்குநா் முரளி, மாவட்ட அலுவலா் வினோத் ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், விபத்து குறித்து காவல் ஆய்வாளா் ராஜாசோ்வை தலைமையிலான மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Story image